செய்திகள்
போடியில் பள்ளி எதிரே மது விற்ற பெண் வியாபாரி கைது
போடியில் பள்ளி எதிரே மது விற்ற பெண் வியாபாரி கைதானார்.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடி ஏலக்காய் விற்பனைக்கு சிறந்த நகராக உள்ளது. ஆனால் இந்த பகுதியில் நாளுக்கு நாள் கஞ்சா விற்பனை, மதுவிற்பனை அதிகரித்த வண்ணம் உள்ளது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க பொது மக்கள் போலீசாருக்கு புகார் தெரிவித்த வண்ணம் உள்ளனர். ஆனாலும் தொடர்ந்து மது விற்பனை நடந்து வருகிறது.
போடியில் தேனி ரோட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளி எதிரே இரும்புக்கடையில் மது பதுக்கி விற்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.
அதன்பேரில் போலீசார் அந்த பகுதிக்கு விரைந்தனர். மது விற்றதாக அங்கிருந்த பெண்ணை கைது செய்தனர். அவரது பெயர் பஞ்சம்மாள். (வயது 60). போடி கீழத்தெருவை சேர்ந்த இவர் தொடர்ந்து மது விற்று வந்து உள்ளார்.
போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.