கோவையில் 8-ம் வகுப்பு மாணவி பலாத்காரம்- மேலும் ஒருவர் கைது
கோவை:
கோவை தெலுங்கு பாளையத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பாலியல் வன்கொடுமையில் இருந்து மாணவிகள் தப்பிப்பதற்காக விழிப்புணர்வு நிகழ்ச்சி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையம் சார்பில் நடத்தப்பட்டது.
அப்போது அப்பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமை குறித்து குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகளிடம் கூறினார்.
தன்னுடைய தந்தையும் அவரது சகோதரர்களான 2 சித்தப்பாக்களும் கடந்த ஒன்றரை வருடங்களாக பாலியல் பலாத்காரம் செய்து கொடுமை படுத்துவதாக மாணவி கூறினார்.
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் இது குறித்து செல்வபுரம் போலீசில் புகார் செய்தனர்.
இது தொடர்பாக மாணவியின் தந்தை, 2 சித்தப்பாக்கள் மீது போக்சோ சட்டத்தில் வழக்குபதிவு செய்தனர். தந்தை மற்றும் ஒரு சித்தப்பாவை கைது செய்தனர். மற்றொரு சித்தப்பா தலைமறைவாக இருந்தார்.
அவரை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் அவர் இன்று கைது செய்யப்பட்டார். அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க உள்ளனர்.