செய்திகள்
மான் வேட்டையாடியவரை கைது செய்த வனத்துறையினரை படத்தில் காணலாம்.

பாலக்கோடு அருகே மான், முயல் வேட்டையாடிய 2 பேருக்கு ரூ.35 ஆயிரம் அபராதம்

Published On 2020-05-06 12:15 GMT   |   Update On 2020-05-06 12:15 GMT
பாலக்கோடு அருகே வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மான், முயல் வேட்டையாடிய 2 பேருக்கு ரூ.35 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
பாலக்கோடு:

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே திருமல்வாடி மற்றும் பிக்கிலி காப்புகாடு பகுதிகளில் மர்ம நபர்களால் தொடர்ந்து காட்டு விலங்குகள், மான், முயல், காட்டு பன்றி, மயில், உடும்பு உள்ளிட்ட வனவிலங்குகள் தொடர்ந்து வேட்டையாடபடுவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார் வந்தது. 

அதன் பேரில் பாலக்கோடு வனச்சரகர் செல்வம் தலைமையில் குழு அமைக்கப்பட்டு போலீசார் காப்புக்காடு பகுதிகளில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பிக்கிலி பகுதியை சேர்ந்த சிவராஜ் (வயது46) என்பவர் முயல் வேட்டையாட கம்பிவலை, கத்தி முயல் கூண்டு உள்ளிட்ட பொருட்களை கொண்டு சென்றபோது வனத்துறையினர் அவரை கைது செய்து 10 ஆயிரம் அபராதம் விதித்தனர். 

மேலும் திருமல்வாடி காட்டுப்பகுதியில் சாஸ்திரமுட்லு கிராமத்தைச் சேர்ந்த சரவணன் (34) என்பவர் வனத்துறையினரை கண்டுடதும் ஓட முயன்றுள்ளார். அவரை பிடித்து விசாரித்ததில் மானை வேட்டையாடியது தெரியவந்தது. அவர் வீட்டில் பதுக்கி வைத்திருந்த மான் தோலை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.

மேலும் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. மான் தோல் மற்றும் வேட்டையாட பயன்படுத்திய பொருட்கள் வனத்துரையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. மொத்தமாக இவர்களிடமிருந்து 35 ஆயிரம் அபராதம் விதித்து வனத்துறையினர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டனர்.
Tags:    

Similar News