செய்திகள்
கடைகளில் ஆய்வு நடத்திய உணவு பாதுகாப்பு அதிகாரிகள்

போளூரில் கடைகளில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் ஆய்வு

Published On 2020-06-12 08:06 GMT   |   Update On 2020-06-12 08:06 GMT
திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி உத்தரவின்படி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் பேக்கரி, மளிகை கடைகளில் ஆய்வு நடத்தினார்.
போளூர்:

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி உத்தரவின்படி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் செந்தில்குமார் தலைமையில் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் (பொறுப்பு) ஏ.சுப்பிரமணியன் மற்றும் குழுவினர் போளூர் பஸ் நிலையம், பழைய பஸ் நிலைம், பஜார் வீதி சிந்தாதிரிப்பேட்டை தெரு ஆகிய இடங்களில் உள்ள பேக்கரி, மளிகைகடை, பங்க் கடை மற்றும் குளிர்பான கடை என பல்வேறு கடைகளில் திடீர் ஆய்வு செய்தனர்.

அப்போது காலாவதியான இனிப்பு, காரவகைகள், குளிர்பானம் மற்றும் உணவு பொருட்கள் 5 கிலோவை கைப்பற்றி அழித்தனர். 2 கடைகளுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கினர். மேலும் ஒரு பேக்கரிக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்பட்டது. சமூக இடைவெளி, முககவசம் அணிந்து வரும் வாடிக்கையாளர்களுக்கு பொருட்கள் வழங்கவும், கிருமிநாசினி கடைகளின் முன்புறம் வைக்கவும் கடை உரிமையாளர்களிடம் அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
Tags:    

Similar News