செய்திகள்
பேரையூர் அருகே புகையிலை பொருட்கள் பறிமுதல் - 4 பேர் கைது
பேரையூர் அருகே புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் 4 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேரையூர்:
பேரையூர், சாப்டூர், சேடபட்டி பகுதி போலீசார் ரோந்து சென்றனர். அப்போது சிலைமலைபட்டியை சேர்ந்த கருப்பசாமி(வயது 35) என்பவர் பெட்டிக்கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் 35 பாக்கெட்டுகளை வைத்து இருந்தார். போலீசார் அவற்றை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.
இதேபோல் தொட்டணம்பட்டியை சேர்ந்த கருப்பசாமி என்பவரிடமிருந்து 32 புகையிலை பாக்கெட்டுகளையும், சலுப்பபட்டியை சேர்ந்த சின்னமுத்தன் என்பவரிடமிருந்து 15 பாக்கெட்டுகளையும், வீராளம்பட்டியை சேர்ந்த முருகாண்டி என்பவரிடம் இருந்து 14 புகையிலை பாக்கெட்டுகளையும் போலீசார் பறிமுதல் செய்து அவர்களை கைது செய்தனர்.