செய்திகள்
தர்ப்பூசணி

திண்டுக்கல்லில் தர்ப்பூசணி விற்பனை அமோகம்

Published On 2021-04-04 14:50 GMT   |   Update On 2021-04-04 14:50 GMT
திண்டுக்கல்லில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் இளநீர், தர்ப்பூசணி, நுங்கு ஆகியவற்றின் விற்பனை தற்போது சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.
திண்டுக்கல்:

திண்டுக்கல்லில் கடந்த சில வாரங்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதன் காரணமாக திண்டுக்கல்லில் இளநீர், தர்ப்பூசணி, நுங்கு ஆகியவற்றின் விற்பனை தற்போது சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதில் தர்ப்பூசணி பழத்தில் நீர்சத்து அதிகமுள்ளதால் பொதுமக்கள் தர்ப்பூசணி பழங்களை அதிக அளவில் வாங்கி சாப்பிடுகின்றனர். 

திண்டிவனம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து தர்ப்பூசணி பழங்கள் திண்டுக்கல்லுக்கு விற்பனைக்காக கொண்டுவரப்படுகிறது. இந்த பழங்கள் ஒரு கிலோ ரூ.20 வரையும், ஒரு துண்டு பழம் ரூ.10-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

கோடை வெயிலின் சூட்டை தணித்து குளுமையை தருவதால் இந்த பழங்களை சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் அவற்றின் விற்பனையும் அமோகமாக நடந்து வருகிறது.
Tags:    

Similar News