உள்ளூர் செய்திகள்
இலவச தையல் எந்திரம் பெற சிறுபான்மையினர் விண்ணப்பிக்கலாம் : கலெக்டர் அரவிந்த்
இலவச தையல் எந்திரம் பெற சிறுபான்மையினர் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அரவிந்த் தகவல் தெரிவித்துள்ளார்.
நாகர்கோவில்:
கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதா வது:-
தமிழ்நாடு அரசின் 2021-2022-ம் ஆண்டிற்கான மானியக்கோரிக்கையில் சிறு பான்மையினர் சமூகத்தை சேர்ந்த மக்களின் பொருளாதார நிலையில் திட்டமிடப்பட்ட உறுதியான முன்னேற்றத்தை அடைவதற்காகவும், அவர்களின் வாழ்க்கை தரத்தினை உயர்த்தவும் இலவச மின்மோட்டாருடன் கூடிய தையல் எந்திரங்களை வழங்கிட தமிழக முதல்வரால் ஆணையிடப்பட்டதை தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள சிறுபான் மையின சமூகத்தை சார்ந்த வர்களுக்கு மின் மோட்டா ருடன் கூடிய இலவச தையல் எந்திரம் பெறுவதற்கு தகுதியுடைய நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வர வேற்கப்படுகிறது.
வயது வரம்பு 20 முதல் 45 வரையுள்ள தையல் கலை பயின்றவராக இருக்க வேண்டும் மற்றும் தையல் கலை பயின்றதற்கான உரிய சான்றிதழ் சமர்பிக்கப்பட வேண்டும். ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.1 லட்சம் ஆக இருத்தல் வேண்டும். கைம் பெண் மற்றும் கணவரால் கைவிடப்பட்டவர் போன்ற வர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
ஒருமுறை தையல் எந்திரம் பெற்றிருப்பின் மீண்டும் தையல் எந்திரம் பெற 7 ஆண்டுகள் கடந்த பின்னரே தகுதி உடையவராக கருதப்படுவர். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புபவர்கள் கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விபரங்கள் பெற்று 10.3.2022-க்குள் விண்ணப்பித்து பயன் பெறலாம்.
இவ்வாறு அறிக்கையில் கூறி உள்ளார்.