உள்ளூர் செய்திகள்
உலக கண் நீர் அழுத்த நோய் விழிப்புணர்வு கண்காட்சி
நெல்லை டாக்டர் அகர்வால் கண் ஆஸ்பத்திரியில் உலக கண் நீர் அழுத்த நோய் விழிப்புணர்வு கண்காட்சி நடைபெற்றது.
நெல்லை:
உலக கண் நீர் அழுத்த நோய் விழிப்புணர்வு வாரத்தை யொட்டி, நெல்லை டாக்டர் அகர்வால் கண் ஆஸ்பத்திரியில் இலவச கண் நீர் அழுத்த பரிசோதனை மேற்கொள்ள சிறப்பு பிரிவு மற்றும் கண்காட்சி தொடங்கி வைக்கப்பட்டது.
இதனை நெல்லை மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் டாக்டர் எம்.ரவிச்சந்திரன் தொடங்கி வைத்தார்.
டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையின் மண்டல மருத்துவ இயக்குனர் பேராசிரியர் டாக்டர் டே.லயனல்ராஜ் முன்னிலை வகித்தார்.
மேலும் கண்நீர் அழுத்தத்தினால் ஏற்படும் பாதிப்பு மற்றும் அதை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து விளக்கி கூறினார்.
டாக்டர் அகர்வால் ஆப்டோ மெட்ரிக் கல்லூரி மாணவ& மாணவிகள் கண் நீர் அழுத்த விழிப்புணர்வு விளக்க படங்களை வரைந்து காட்சிப்படுத்தினர்.
கண்நீர் அழுத்த இலவச கண் பரிசோதனை சிறப்பு பிரிவானது வருகிற 12-ந்தேதி வரை தினமும் செயல்படுகிறது. இதில் அனைவரும் இலவசமாக கண் பரிசோதனை செய்து கொண்டு பயன்பெறலாம்.
கண் நீர் அழுத்த விழிப்புணர்வு மனித சங்கிலி நாளை மறுநாள் (வியாழக்கிழமை) டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனையின் முன்புறம் நடைபெற உள்ளது.
மாநகர போலீஸ் துணை கமிஷனர் டி.பி.சுரேஷ்குமார் பங்கேற்று தொடங்கி வைக்கிறார். இதில் பள்ளி, கல்லூரி மாணவிகள், டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை டாக்டர்கள், ஊழியர்கள் பங்கேற்கின்றனர்.