உள்ளூர் செய்திகள்
சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்த அதிமுகவினர்

சட்டசபையில் இருந்து அ.தி.மு.க.வினர் வெளிநடப்பு

Published On 2022-03-18 04:46 GMT   |   Update On 2022-03-18 05:15 GMT
தமிழக சட்டசபை கூடியதும் சபாநாயகர் அப்பாவு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனை பட்ஜெட்டை தாக்கல் செய்ய வருமாறு அழைத்தார்.
சென்னை:

2022-2023-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக தமிழக சட்டசபை இன்று கூடியது. அவை கூடியதும் சபாநாயகர் அப்பாவு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனை பட்ஜெட்டை தாக்கல் செய்ய வருமாறு அழைத்தார்.

அதைத் தொடர்ந்து நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அவர் பட்ஜெட்டை வாசிக்க தொடங்கியதும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டனர். அவை மரபை மீறக்கூடாது என்றும் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இருவரும் முதலமைச்சர் பதவியில் வகித்தவர்கள்.  இதனால் அவை மரபை மீற வேண்டாம் என்று சபாநாயகர் அப்பாவு கேட்டுக்கொண்டார். இருப்பினும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.

இதை தொடர்ந்து அ.தி.மு.க.வினர் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.  இதனால் சட்டசபையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Similar News