50 ஏக்கர் சம்பா, தாளடி பயிர்கள் மழைநீரில் மூழ்கின- வாய்க்கால்கள் தூர்வாராததே காரணம் என விவசாயிகள் குற்றச்சாட்டு
- பல்வேறு பகுதிகளிலும் நாற்று நடப்பட் இளம் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கின.
- வாய்கால்களை முறையாக தூர்வார வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சாவூர்:
டெல்டா மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக பெய்து வரக்கூடிய கனமழை காரணமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் பூதலூர், அம்மாபேட்டை, வெட்டிக் காடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் நாற்று நடப்பட் இளம் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கின.
மேலும், அறுவடைக்கு தயாராக இருந்த குறுவை நெற்பயிர்களும் மிகவும் பாதிக்கப்பட்டது. மாவட்டத்தின் கடைமடை பகுதியான அம்மாபேட்டை, விழுதியூர், உக்கடை, புத்தூர், கோவிந்தநல்லூர் ஆகிய பகுதிகளில் நடப்பட்டிருந்த சுமார் 50 ஏக்கர் சம்பா, தாளடி பயிர்கள் நீரில் மூழ்கின.
வயல்களில் தண்ணீர் தேங்கியதற்கும், மழைநீர் வடியாததற்கும் தஞ்சை-நாகை தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள வடிகால் வாய்க்கால்கள் முறையாக தூர்வாராததே காரணம் எனக்கூறி விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
உடனடியாக வாய்கால்களை முறையாக தூர்வார வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இல்லாவிடில் மறியல் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.