உள்ளூர் செய்திகள்
ஓட்டப்பிடாரத்தில் பலத்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி
ஓட்டப்பிடாரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் பலத்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
புதியம்புத்தூர்:
நெல்லை, தென்காசி மாவட்டத்தில் மழை குறைந்து வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது.
இதனால் அணைகளுக்கு நீர்வரத்து குறைய தொடங்கி உள்ளது. 143 அடி கொள்ளளவு கொண்ட இந்த அணையில் நேற்று 68.75 அடி நீர் இருந்த நிலையில் இன்று சற்று உயர்ந்து 69.30 அடியாக உள்ளது.
மணிமுத்தாறு அணையில் 83.50 அடியும், சேர்வலாறு அணையில் 82.54 அடியும் நீர் இருப்பு உள்ளது. மணிமுத்தாறு அணைக்கு வினாடிக்கு 54 கனஅடியும், பாபநாசத்திற்கு 693.40 கனஅடியும் நீர் வந்து கொண்டு இருக்கிறது
தென்காசி மாவட்டத்தில் தற்போது மழை குறைந்துவிட்டதால் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீர் குறைந்துவிட்டது.
ஆனாலும் சுற்றலா பயணிகள் கூட்டம் அலைமோதி வருகிறது. அவர்கள் நீண்ட வரிசையில் நின்று குளித்து செல்கின்றனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் ஓட்டப்பிடாரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று திடீரென பலத்த மழை பெய்தது. இந்த திடீர் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
அந்த பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. இன்று காலை நிலவரப்படி ஓட்டப்பிடாரத்தில் 37 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.
புதியம்புத்தூர் பகுதியில் நேற்று மாலை 3 மணி அளவில் வானத்தில் மேகமூட்டம் காணப்பட்டது. திடீரென பலத்த மழை பெய்தது.
இந்த மழை தட்டப்பாறை வடக்காக ஓட்டப்பிடாரம் வரை பெய்தது. ஜம்புலிங்க புரத்தில் இருந்து தட்டப்பாறை வரையுள்ள விவசாய நிலங்களில் பெய்த கனமழையால் ஓடைகளின் வழியாக நீர் வரத்து அதிகரித்துபுதியம்புத்தூர் மலர் குளத்திற்கு வந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.