உள்ளூர் செய்திகள்

நீலகிரி சோதனைச்சாவடிகளில் 24 மணிநேரமும் கண்காணிப்பு

Published On 2023-10-16 10:03 GMT   |   Update On 2023-10-16 10:03 GMT
  • மாவோயிஸ்டுகள் நடமாட்டத்தை தீவிர கண்காணிப்பதாக போலீஸ் சூப்பிரண்டு பேட்டி
  • சோதனை சாவடிகளில் 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு, வாகன தணிக்கை சோதனை

ஊட்டி,

கேரள மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. அவர்கள் வயநாடு பகுதியில் உள்ள அரசு அலுவலகங்களில் திடீர் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். எனவே கேரளாவில் பதுங்கி உள்ள மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் பணியில் அந்த மாநில போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதன்காரணமாக அவர்கள் தமிழகத்துக்குள் ஊடுருவ முயல்வதாக உளவுத்துறைக்கு ரகசிய தகவல்கள் கிடைத்து உள்ளது. எனவே தமிழகம்-கேரளா எல்லைப்பகுதியில் நீலகிரி மாவட்டத்தில் உள்ள சோதனைச்சாவடி களில் போலீசார் தீவிரமாக கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிர ண்டு பிரபாகர் அங்கு உள்ள சோதனை சாவடி களில் நேரடியாக பார்வை யிட்டு ஆய்வுசெய்தார். அங்கு மேற்கொள்ள ப்படும் சோதனை பணிகள் மற்றும் புதிதாக வரும் வாகனங்களை சோதனை செய்த விவரங்கள் ஆகி யவை குறித்து கேட்டறிந்தார்.

தொடர்ந்து நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு பிரபாகர் நிருபர்க ளுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

தமிழகம்-கேரளா எல்லைப்பகுதிகளில் மாவோயிஸ்டுகள் நடமா ட்டத்தை கண்காணிக்கும் வகையில் போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ள னர். இதன்ஒருபகுதியாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள சோதனைச் சாவடிகளில் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக மாவட்ட எல்லை பகுதியில் உள்ள சோதனை சாவடியில் 24 மணி நேரமும் பாதுகாப்பு உஷார்ப்படு த்தப்பட்டு உள்ளது. மேலும் வாகன தணிக்கை சோதனையும் நடத்தப்பட்டு வருகிறது.

குறிப்பாக தமிழகம்-கேரளா எல்லையில் நீலகிரி மாவட்டத்தில் பந்தலூர் தாலுகா உள்ளது. அங்கு போலீசார் தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். வயநாடு பகுதியில் தற்போது மாவோயிஸ்டுகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது.

எனவே தமிழகம்-கேரளா வனப்பகுதிகளில் இருமாநில அதிரடி படை போலீசாரும் தொடர் கண்காணிப்பு மற்றும் தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் நீலகிரியில் உள்ள சோதனை சாவடிகளில் 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு மற்றும் வாகன தணிக்கை சோதனை ஆகியவை நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News