உள்ளூர் செய்திகள்

அம்பத்தூரில் 3 கி.மீ. தூரத்துக்கு ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைகள்-வீடுகள் இடிப்பு

Published On 2023-04-29 10:39 GMT   |   Update On 2023-04-29 10:39 GMT
  • 100-க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் வீடுகளின் ஆக்கிரமிப்புகள் ஜே.சி.பி இயந்திரம் மூலமாக அகற்றப்பட்டது.
  • ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த அதிகாரிகளிடம் பொது மக்கள் மற்றும் கடையின் உரிமையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அம்பத்தூர்:

செங்குன்றம் அம்பத்தூர் நெடுஞ்சாலையில் கடைகள் மற்றும் வீடுகளின் ஆக்கிரமிப்பு அதிகமாக உள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக அம்பத்தூர் போக்குவரத்து துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறைக்கு புகார்கள் வந்தன.

இதையடுத்து நெடுஞ்சாலைத்துறை, அம்பத்தூர் போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள், சென்னை மாநகராட்சி அம்பத்தூர் மண்டல பணியாளர்கள் ஆகியோர் சட்டம் ஒழுங்கு காவலர்களின் பாதுகாப்புடன் அம்பத்தூரில் நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

அம்பத்தூர் தனியார் திரையரங்கம் முதல் ஒரகடம், அம்பேத்கர் சிலை, புதூர், கள்ளிக்குப்பம் வரையிலான சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடங்களிலும், மழைநீர் கால்வாய் உள்ள இடங்களிலும் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 100-க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் வீடுகளின் ஆக்கிரமிப்புகள் ஜே.சி.பி இயந்திரம் மூலமாக அகற்றப்பட்டது.

மேலும் ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த அதிகாரிகளிடம் பொது மக்கள் மற்றும் கடையின் உரிமையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News