வேப்பூர் அருகே மினி லாரியில் போதை பொருட்கள் கடத்தல் 3 பேர் கைது
- வேனின் வெளிப்புற அளவிற்கும் உட்புற அளவிற்கும் வித்தியாசம் இருந்ததால் சந்தேகமடைந்த போலீசார், வேனை வேப்பூர் போலீஸ் நிலை யத்துக்கு கொண்டு சென்றனர்.
- போதை மற்றும் புகையிலை பொருள் மூட்டைகளை வைத்து இரும்பு தகரத்தால் மூடி கடத்தி வந்தது தெரிய வந்தது.
கடலூர்:
கடலூர் மாவட்டம், வேப்பூர் வழியாக அரசு தடை செய்த போதைப் பொருள்கள் கடத்தல் நடப்பதாக கடலூர் போலீஸ் சூப்பிரண்டுக்கு ரகசிய தகவல் கிடைத்தது . அதன்படி தனிப்படை போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் அழகிரி தலைமையிலான போலீசார், வேப்பூர் சேலம் சாலையில் விளம்பாவூர் சிப்காட் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அவ்வழியே வந்த பொலிரோ மினி லாரியை மடக்கி சோதனை செய்தனர். அதில், வீடு கட்டுமானப் பணிக்கு தேவையான பொருட்கள் இருந்தது. ஆனால், வேனின் வெளிப்புற அளவிற்கும் உட்புற அளவிற்கும் வித்தியாசம் இருந்ததால் சந்தேகமடைந்த போலீசார், வேனை வேப்பூர் போலீஸ் நிலை யத்துக்கு கொண்டு சென்று சோதனை செய்தனர்
போலீசாரின் சோதனை யில் தப்பிக்க வேனின் பக்க வாட்டில் அறைகள் அமைத்து அதில் போதை மற்றும் புகையிலை பொருள் மூட்டைகளை வைத்து இரும்பு தகரத்தால் மூடி கடத்தி வந்தது தெரிய வந்தது. இது குறித்து வேப்பூர் போலீசார் வழக்குப் பதிந்து போதை மற்றும் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும், திட்டக்குடி அருகே அருகேரி கிராம த்தில் மளிகைகடை வைத்தி ருக்கும் மகேந்திரன், (வயது35,) அதே கிராமத்தை சேர்ந்த தெய்வமணி (வயது 25), பொலிரோ வேன் டிரைவரான ஆரோக்கிய சாமி (வயது 33), ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.