உள்ளூர் செய்திகள்
திருப்பூர் மார்க்கெட்டில் அதிரடி சோதனை- 330 கிலோ சீனா பூண்டுகள் பறிமுதல்
- உடலுக்கு தீங்கு விளைவிக்கும் சீனா பூண்டுகள் விற்பனை செய்யப்படுவதாக தகவல்.
- மாவட்டம் முழுவதும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.
திருப்பூர்:
திருப்பூரில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் சீனா பூண்டுகள் விற்பனை செய்யப்படுவதாக திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிக்கு ரகசிய தகவல்கள் வந்தன.
இதனையடுத்து இன்று திருப்பூர் மார்க்கெட் மற்றும் பூண்டு மண்டிகளில் திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி விஜயலலிதாம்பிகை தலைமையிலான அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது பல்வேறு இடங்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 330 கிலோ சீனா பூண்டுகளை பறிமுதல் செய்தனர்.
மேலும் அவை பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து மாவட்டம் முழுவதும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.