உள்ளூர் செய்திகள்

உண்டியலில் எரிந்த நிலையில் இருந்த ரூபாய் நோட்டுகளை தனியாக பிரித்தெடுப்பதை படத்தில் காணலாம்.

கிளியனூர் அருகே அய்யனார் கோவில் உண்டியல் பணம் 50 ஆயிரம் எரிந்து சேதம்: மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

Published On 2023-08-06 07:07 GMT   |   Update On 2023-08-06 07:07 GMT
  • கிளியனூர் போலீசார் விரைந்து வந்து தீயணைப்பு துறையினர் மூலம் தீயை அணைத்தனர்.
  • 7 ஆயிரத்து 500 ரூபாய் பணம் கோவிலின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது.

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் கிளியனூர் அருகே மொளச்சூரில் உள்ள அய்யனார் கோவில் உண்டியலுக்கு மர்மநபர்கள் கடந்த 3-ந்தேதி தீ வைத்தனர். இது தொடர்பான தகவலின் பேரில் கிளியனூர் போலீசார் விரைந்து வந்து தீயணைப்பு துறையினர் மூலம் தீயை அணைத்தனர். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்து அறநிலையத் துறையின் விழுப்புரம் உதவி ஆணையர் திவாகர், ஆய்வாளர் தினேஷ்குமார் ஆகியோர் முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டது.

அதில் எரிந்த நிலையில் இருந்த ரூபாய் நோட்டுகள் மற்றும் நல்ல நிலையில் இருந்த ரூபாய் நோட்டுகள் பிரிக்கப்பட்டது. மேலும், நாணயங்களும் தனியாக பிரித்தெடுக்கப்பட்டது. ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள நோட்டுகள் எரிந்து போயிருந்தது. மேலும், நல்ல நிலையில் இருந்த 7 ஆயிரத்து 500 ரூபாய் பணம் கோவிலின் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டது. கோவில் உண்டியலுக்குள் தீ வைத்து பக்தர்களின் காணிக்கைகளை எரித்த மர்மநபர்களை கிளியனூர் போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News