உள்ளூர் செய்திகள்

பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்ட காட்சி.

மயிலம் அருகே உயர் மின்னழுத்த கம்பி அறுந்து விழுந்து சிறுவன் பலிபொதுமக்கள், உறவினர்கள் சாலை மறியல்

Published On 2023-03-25 07:20 GMT   |   Update On 2023-03-25 07:20 GMT
  • எதிர்பாராத விதமாக அறுந்து, அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் மீது விழுந்துள்ளது.
  • ஜக்காம் பேட்டையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம்:

மயிலம் அருகே உயர் மின்ன ழுத்த கம்பி அறுந்து விழுந்ததில் சிறுவன் உயிரி ழந்த நிலையில், மற்றொரு சிறுவன் படுகாய மடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். திண்டிவனம் அடுத்த மயிலம் அருகே உள்ள வேங்கை கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் யுவனேஸ்வரன்(4).அதே பகுதியை சேர்ந்த ராஜா மகன் நித்திஷ்(4), உள்ளிட்ட 4 சிறுவர்கள் இன்று காலை வீட்டின் அருகே உள்ள வயல்வெளி பகுதியில் விளையாடிக் கொண்டி ருந்தனர். அப்போது அப்பகுதியில் சென்ற உயர் மின்னழுத்த கம்பி எதிர்பாராத விதமாக அறுந்து, அங்கு விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் மீது விழுந்துள்ளது. இதில் யுவனேஸ்வரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மயிலம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் காயமடைந்த நித்திஷ் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் காலை 7.30 மணியளவில் நடைபெற்ற சம்பவம் குறித்து, அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால் இதுவரை மின் ஊழிய அலுவலர்கள் சம்பவ இடத்திற்கு செல்லவில்லை என கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சிறுவனின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள், ஜக்காம்பேட்டையில் உள்ள மின்வாரிய அலுவலகத்தில் சென்று தகவல் தெரிவித்துள்ளனர். அப்போது மின்வாரிய ஊழியர்களுக்கும் பொது மக்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டதால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை ஜக்காம் பேட்டையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த டிஎஸ்பி சுரேஷ் பாண்டியன் மற்றும் மயிலம் போலீசார் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனால் போராட்டம் கைவிடப்பட்டது. மேலும் இந்த சாலை மறியல் போராட்டத்தால் சுமார் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags:    

Similar News