உள்ளூர் செய்திகள்

தீக்குளிக்க முயன்ற விவசாயி குடும்பத்தை படத்தில் காணலாம்.

விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற விவசாயி

Published On 2023-11-08 08:34 GMT   |   Update On 2023-11-08 08:34 GMT
  • அவர்கள் பாதையை பயன்படுத்தக் கூடாது எனவும் நீதிமன்றம் கூறியுள்ளது.
  • அவர்களை தடுத்து நிறுத்தி விழுப்புரம் தாலுகா ேபாலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர்.

விழுப்புரம்:

விழுப்புரம் அடுத்த பொய்ய பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த புஷ்பநாதன் மகன் சர்வேசன்( வயது 34) அவரது மனைவி விஜயா தேவி, உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் 7 பேர் அவர்களுக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தினை பக்கத்து நிலத்தைச் சேர்ந்த போலீசில் பணியாற்றி வரும் போலீசார் இருவர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி ஆக்கிரமித்து பாதை அமைத்து அவரது நிலத்திற்கு செல்வதாகவும், இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததில் அவர்கள் பாதையை பயன்படுத்தக் கூடாது எனவும் நீதிமன்றம் கூறியுள்ளது.

அதை மீறி அவர்கள் தங்களுக்கு கொலை மிரட்டல் விடுத்து, தங்கள் நிலப்பயிர்களை அழித்து பாதையை பயன்படுத்தி வருவதாகவும் இதுகுறித்து பலமுறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தனது குடும்பத்துடன் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். உடனடியாக பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி விழுப்புரம் தாலுகா ேபாலீஸ் நிலையம் அழைத்துச் சென்றனர்.இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவியது.

Tags:    

Similar News