தியாகதுருகம் பகுதியை சேர்ந்தவர்வெளிநாட்டுக்கு வேலைக்குசென்ற எலக்ட்ரீசியன் சாவு: உடலை தமிழகம் கொண்டு வர பெற்றோர் வேண்டுகோள்
- வெளிநாட்டுக்கு வேலைக்கு சென்ற எலக்ட்ரீசியன் சாவு.
- மகன் உடலை தமிழகம் கொண்டுவர தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே கொட்டையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சக்ரவர்த்தி. இவரது மகன் சரவணன் (வயது 25). டிப்ளமோ சிவில் என்ஜினியரிங் படித்துள் ளார். கடந்த 3 ஆண்டு களுக்கு முன்பு துபாயில் உள்ள அஜ்மன் பகுதியில் உள்ள நிறுவனத்திற்க்கு எலக்ட்ரீசியன் வேலைக்குச் சென்றார் இவர் அவ்வப்போது பெற்றோர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசுவது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் பெற்றோர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார்.
இந்நி லையில் நேற்று இவர் வேலை பார்க்கும் நிறுவனத்தில் இருந்து தொலை பேசியில் தொடர்பு கொண்ட நபர் சரவணன் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் செய்வது அறியாமல் கதறி அழுதனர். இதுகுறித்து சரவணனின் பெற்றோர் கூறுகையில், தனது மகன் தற்கொலை செய்து கொண்டதாக நிறுவத்தினர் கூறுகின்றனர். எனது மகன் உடலை தமிழகம் கொண்டுவர தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார் வெளிநாட்டிற்கு வேலைக்குச் சென்ற இளைஞர் இறந்து போன சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.