உள்ளூர் செய்திகள்
சிலம்பம் சுற்றிய மாணவர்களை படத்தில் காணலாம்.
பாவூர்சத்திரத்தில் 2 மணி நேரம் சிலம்பம் சுற்றி மாணவர்கள் சாதனை முயற்சி
- 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தொடர்ந்து 2 மணி நேரம் சிலம்பம் சுற்றி புதிய சாதனை முயற்சி மேற்கொண்டனர்.
- தென்காசி மாவட்ட சிலம்பம் விளையாட்டு சங்க தலைவர் சத்திய பீமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தென்காசி:
தமிழ் வருடப்பிறப்பை முன்னிட்டு உலக சிலம்பம் விளையாட்டு சங்கம், தென்காசி மாவட்ட சங்கம் சார்பில் பாவூர்சத்திரத்தில் உள்ள எஸ்.டி.கே. ரைஸ் மில் வளாகத்தில் 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு தொடர்ந்து 2 மணி நேரம் சிலம்பம் சுற்றி புதிய சாதனை முயற்சி மேற்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் தென்காசி மாவட்ட சிலம்பம் விளையாட்டு சங்க தலைவர் சத்திய பீமன், செயலாளர் சுதர்சன், துணைத் தலைவர் ஜெயராஜ் மற்றும் பயிற்சியாளர்கள் பிரஜித்குமார், முத்தையா, சண்முகப்பிரியா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த புதிய முயற்சியில் ஆலங்குளம், பாவூர்சத்திரம், தென்காசி, மருதப்பபுரம், சுரண்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.