உள்ளூர் செய்திகள்
வீட்டில் புகுந்த பாம்பு பிடிப்பட்டது
- இந்த நிலையில் இவரது வீட்டின் மின் இணைப்பு அறையில் 6 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு திடீரென புகுந்தது.
- பின்னர் அந்த பாம்பை சாக்குப்பையில் போட்டு அருகில் உள்ள வனப்பகுதியில் விட்டனர்.
பாபநாசம்:
பாபநாசம் அருகே வங்காரம் பேட்டை தஞ்சை மெயின் சாலையில் வசித்து வருபவர் அரங்கராஜன் (வயது 55) இவர் நகை வேலை செய்து வருகிறார்
இந்த நிலையில் இவரது வீட்டின் மின் இணைப்பு அறையில் 6 அடி நீளமுள்ள சாரைப்பாம்பு திடீரென புகுந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அரங்கராஜன் உடனடியாக பாபநாசம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
தகவல் அறிந்ததும் பாபநாசம் தீயணைப்பு நிலைய அலுவலர் இளங்கோவன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து வீட்டின் மின் இணைப்பு அறையில் புகுந்த சாரைப்பாம்பை பிடித்தனர்.
பின்னர் அந்த பாம்பை சாக்குப்பையில் போட்டு அருகில் உள்ள வனப்பகுதியில் விட்டனர்.