தொழில் முனைவோர்களுக்கு சிறப்பு கூட்டம்
- வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் குறித்து கூட்டம் நடைபெற்றது.
- பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தனர்.
காரிமங்கலம்,
காரிமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் வேலையில்லா இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் குறித்து கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்துக்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிருஷ்ணன், கலைவாணி ஆகியோர் தலைமை வகித்தனர்.
கூட்டத்தில் மாவட்ட தொழில் மைய தொழில் ஊக்குவிப்பாளர் வெங்கடே ஸ்வரி, மாவட்ட வள அலுவலர் கவுரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பின்னர் அவர்கள் பேசுகையில், காரிமங்கலம் ஊராட்சி ஓன்றியத்தில் உள்ள 30 ஊராட்சிகளை சேர்ந்த முதல் தலை முறை தொழில் முனைவோர்களுக்கு சிறப்புத் திட்டம் குறித்தும், வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் குறித்தும், பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தனர்.
மேலும் இந்த மூன்று திட்டங்களுக்கான கல்வித் தகுதி, வயது, திட்ட மதிப்பீடு, சொந்த முதலீடு, மானிய விபரங்கள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
ஆய்வுக் கூட்டத்தில் 30 ஊராட்சிகளை சேர்ந்த ஊராட்சி செயலாளர்கள் அந்தந்த ஊராட்சிகளை சேர்ந்த தகுதி வாய்ந்த பயனாளிகளை கண்டறிந்து மாவட்ட தொழில் மையத்தில் செயல்படுத்தப்படும் சுயதொழில் கடன் திட்டங்கள் குறித்து விரிவாக தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டது.
மேலும் இது தொடர்பான கூடுதல் விபரங்களுக்கு அலுவலக கைபேசி எண்கள் 89255 33941 மற்றும் 04342-230892 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்தனர்.
கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலக பணியாளர், ஊராட்சி செயலாளர்கள் உள்ளி ட்டோர் கலந்து கொண்டனர்.