தேனியில் திருநங்கைகள் குறைதீர் கூட்டம்-கலெக்டர் தலைமையில் நடந்தது
- தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், திருநங்கைகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடைபெற்றது.
- பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுரை வழங்கினார்.
தேனி:
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், திருநங்கைகளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஷஜீவனா தலைமையில் நடைபெற்றது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை யின்படி திருநங்கைகளு க்கான குறைகளை நிவர்த்தி செய்திடவும் அவர்களுக்கு ஏற்படும் குறைகளை தீர்த்து வைப்பதற்காக மாதந்தோறும் குறைதீர்க்கும் முகாம் நடத்திட உத்தரவிட ப்பட்டது.
அதன்படி திருநங்கை களுக்கான குறைதீர்க்கும் முகாம் ஒவ்வொரு மாதமும் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற முகாமில் திருநங்கைகள் பலர் கலந்து கொண்டனர். வீட்டு மனை, கல்வி கடன், அடையாள அட்டை, சுய தொழில் தொடங்க கடன், திருநங்கை அடையாள அட்டையில் முகவரி மாற்றம் செய்து தரக்கோருதல் என பல்வேறு விதமான கோரிக்கை அடங்கிய மனுக்களை மாவட்ட கலெக்டரிடம் வழங்கினர். பெறப்பட்ட மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு துறை அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுரை வழங்கினார்.