உள்ளூர் செய்திகள்

தேரோட்டத்தை வள்ளியூர் அய்யா வழி அகிலத் திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் வள்ளியூர் எஸ்.தர்மர் தொடங்கி வைத்த போது எடுத்த படம்.


திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரப்பதியில் ஆடித்திருவிழா தேரோட்டம்

Published On 2022-08-02 07:09 GMT   |   Update On 2022-08-02 07:09 GMT
  • ஒவ்வொரு நாளும் மாலையில் அய்யா வைகுண்டர் புஸ்பம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் எழுந்தருளும் பவனி நடைபெற்றது.
  • தேரோட்டத்தை வள்ளியூர் அய்யா வழி அகிலத் திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் எஸ்.தர்மர் வடம் பிடித்து தொடங்கி வைத்தார்.

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் கடற்கரை யில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரப் பதியில் ஆடித்திருவிழா கடந்த 22-ந் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது.

வாகன பவனி

11 நாட்கள் நடைபெற்ற விழாவில் தினமும் காலை யில் உகப்படிப்பு, பணிவிடை, பால் அன்னதர்மம், மதியம் உச்சி படிப்பு,பணிவிடை, அன்னதர்மம், மாலையில் உகப்படிப்பு பணிவிடை, அன்ன தர்மம் நடைபெற்றது.

விழாவில் ஒவ்வொரு நாளும் மாலையில் அய்யா வைகுண்டர் புஸ்பம், மயில், அன்னம், சர்ப்பம், கருடன், குதிரை, ஆஞ்சநேயர், இந்திரன் ஆகிய பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி பவனி நடைபெற்றது.


தேரோட்டம்

திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று மதியம் நடைபெற்றது.தேரோட்டத்தை வள்ளியூர் அய்யா வழி அகிலத் திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் எஸ்.தர்மர் வடம் பிடித்து தொடங்கி வைத்தார்.தொடர்ந்து தேரானது பதியைச்சுற்றி வந்து நிலையம் வந்து சேர்ந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டர்.

தேரோட்டத்தில் திருச்செந்தூர் சார்பு நீதிபதி வஷித்குமார், அவதாரப்பதி சட்ட ஆலோசகர் சந்திர சேகர், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் தக்கார் பிரதிநிதி டாக்டர் பாலசுப்பிரமணிய ஆதித்தன், தொழில் அதிபர் அன்பழகன், ராம கிருஷ்ணன், பாதயாத்திரை குழு தலைவர் ஆதிநாரா யனன்,பன்மொழி காளி யப்பன், சிதம்பரபுரம் ராஜ சேகர், நிர்வாக குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

ஏற்பாடுகள்

விழாவுக்கான ஏற்பாடு களை வள்ளியூர் அய்யா வழி ஆகிலத் திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் எஸ்.தர்மர், செயலாளர் பொன்னுதுரை துணைத் தலைவர் அய்யாபழம், துணைச் செயலாளர் ராஜேந்திரன் பொருளாளர் ராமையா நாடார் இணைத் தலைவர்கள் பேராசிரியர் விஜயகுமார், பால்சாமி, ராஜதுரை, கோபால், இணைச் செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், தங்க கிருஷ்ணன், செல்வின், வரதராஜ பெருமாள் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News