பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளில் போலி மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்
- மருத்துவ படிப்பு படிக்காமலே போலி மருத்துவர்கள் பல ஊர்களில் சிகிச்சை செய்வதாக கூறப்படு கின்றது.
- சிகிச்சை அளிப்பவர்கள் மீது மாவட்ட மருத்துவ துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்
கடத்தூர்,
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி தாலுகா பகுதியில் அதிக அளவு மலைபகுதிகளை கிராமங்களை கொண்ட கிராமங்கள் உள்ளன.
தற்போது உணவு பழக்கம், உடற்பயிற்சியின்மை, மாசு கலந்த காற்று உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பொதுமக்கள் பல்வேறு நோய்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.
இதனால் மருத்துவ மனைகள், மருந்து கடைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. மருத்துவ மனைகளுக்கு செல்ல போதிய பஸ் வசதி இல்லாத கிராமங்களில் உள்ள மக்கள் அந்த பகுதிகளில் வைக்கப்பட்டுள்ள மருந்து கடைகளில் மருந்து மாத்திரை வாங்கி பயன்படுத்தும் நிலையில் உள்ளனர்.
இந்த மருந்து கடைகளில் மாத்திரைகளானது கூடுதல் விலைக்கு விற்கப்பட்டு வருகிறது.
அதேபோல் பல இடங்களில் மருத்துவ படிப்பு படிக்காமலே போலி மருத்துவர்கள் பல ஊர்களில் சிகிச்சை செய்வதாக கூறப்படு கின்றது.
பல இடங்களில் மாத்திரை, மருந்து கொடுப்ப வர்களும் அதற்கான எந்த படிப்பும், தகுதியும் இல்லாமல் கொடுத்து வருவதாக கூறப்படு கின்றது.
தடுக்கவேண்டிய அதிகாரிகள் சிலர் அவர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
இதுபோல சிகிச்சை அளிப்பவர்கள் மீது மாவட்ட மருத்துவ துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.