அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்; வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் பணியில் ஈடுபட வேண்டும்- கடம்பூர் ராஜு எம்.எல்.ஏ. பேச்சு
- தூத்துக்குடி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் கடம்பூர் ராஜு எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது.
- 18 வயதுக்கு மேற்பட்டவர்களின் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் பணியில் ஈடுபட வேண்டும் என்று எம்.எல்.ஏ. பேசினார்
கோவில்பட்டி:
கோவில்பட்டி சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் கடம்பூர் ராஜு எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற்றது. அப்போது கடம்பூர் ராஜு எம்.எல்.ஏ. பேசியதாவது:-
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம், பெயர் திருத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான சிறப்பு முகாம் இன்று மற்றும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இதனையடுத்து வருகிற 26 மற்றும் 27 ஆகிய தேதிகளிலும் ஒவ்வொரு வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் நடைபெறும். ஒவ்வொரு அ.தி.மு.க. நிர்வாகிகளும் தங்கள் வார்டுக்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த 18 வயது நிரம்பியவர்களை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது, வாக்காளர் பட்டியலில் இடம் பெறாத 18 வயதுக்கு மேற்பட்டவர்களின் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் பணியில் ஈடுபட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சின்னப்பன், மோகன், அ.தி.மு.க. அவைத் தலைவர் பெருமாள், மாவட்ட துணைச் செயலர் முருகேஸ்வரி, மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் சத்யா, அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், நகரச் செயலர் விஜயபாண்டியன், முன்னாள் நகர் மன்ற துணைத் தலைவர் ராமர், ஒன்றிய செயலாளர் அன்புராஜ், அ.தி.மு.க. நகர பொருளாளர் ஆரோக்கியராஜ், யூனியன் துணைத் தலைவர் பழனிச்சாமி, ஆவின் தாமோதரன், ஆபிரகாம் அய்யாதுரை, மாதவராஜ், நகர்மன்ற உறுப்பினர்கள் கவியரசன், செண்பகமூர்த்தி, வழக்குரைஞரணி வடக்கு மாவட்டச் செயலர் சிவபெருமாள் மற்றும் நகர, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.