சீர்காழி வைத்தியநாதசாமி கோவிலில் அ.தி.மு.க. பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம்
- வைத்தீஸ்வரன்கோயிலில் பிரசித்திப்பெற்ற தையல்நாயகி அம்மன் உடனாகிய வைத்தியநாத சுவாமி கோயில் உள்ளது.
- சுவாமி சன்னிதிகளில் சிறப்பு வழிபாடு செய்து எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம் செய்தார்.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த வைத்தீஸ்வரன்கோயிலில் பிரசித்திப்பெற்ற தையல்நாயகி அம்மன் உடனாகிய வைத்தியநாத சுவாமி கோயில் உள்ளது.
இக்கோயிலில் செல்வ முத்துக்குமாரசுவாமி, அங்காரகன், தன்வந்திரி சித்தர் ஆகிய சுவாமிகள் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகின்றனர்.
சிறப்பு பெற்ற இக்கோயிலுக்கு முன்னாள் முதல்வரும் அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி இன்று வருகை புரிந்தார்.
முன்னதாக கோயில் நிர்வாகம் சார்பில் கட்டளை தந்திரம் ஸ்ரீமத் திருநாவுக்கரசு சுவாமிகள், சிவாச்சாரியார்கள் பூரண கும்ப மரியாதை வழங்கி வரவேற்றனர். தொடர்ந்து கற்பக விநாயகர், வைத்தியநாதர்சுவாமி, செல்வ முத்துக்குமார சுவாமி, தையல்நாயகி அம்மன், அங்காரகன் ஆகிய சுவாமி சன்னிதிகளில் சிறப்பு வழிபாடு செய்து எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம் செய்தார்.
நிகழ்ச்சியில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஓ.எஸ்.மணியன் எம்.எல். ஏ, அதிமுக மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் பவுன்ராஜ்மற்றும் ஏராளமான அதிமுகவினர்கள் உடன் இருந்தனர்.