அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம்
- அ.தி.மு.க.சார்பில், ஓசூரில் கட்சிக்கு தீவிர, உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
- முகாமிற்கு, முன்னாள் நகர்மன்ற உறுப்பினருமான பி.ஆர்.வாசுதேவன் தலைமை தாங்கினார்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அ.தி.மு.க.சார்பில், ஓசூரில் கட்சிக்கு தீவிர, உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது.
ஓசூர் - தேன்கனிக்கோட்டை சாலையில் கூட்டு ரோடு அருகேயுள்ள தனியார் மண்டபத்தில் நடந்த முகாமிற்கு, மாநகர தெற்கு பகுதி செயலாளரும், முன்னாள் நகர்மன்ற உறுப்பினருமான பி.ஆர்.வாசுதேவன் தலைமை தாங்கினார். இதில், மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பாலகிருஷ்ணரெட்டி கலந்துகொண்டு, கட்சி நிர்வாகிகளிடம் உறுப்பினர் படிவத்தை வழங்கி தொடங்கி வைத்தார். மேலும், கட்சியினருக்கு ஆலோசனைகள் வழங்கி நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றினார்.
இதில், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் சிட்டி ஜெகதீசன், மாவட்ட துணைசெயலாளர் மதன், மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் நாராயணன், அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் சீனிவாசன், மாநகராட்சி மண்டல குழு தலைவர் ஜெயப்பிரகாஷ், அமைப்பு சாரா ஓட்டுனர் சங்க மாவட்ட செயலாளர் சென்னகிருஷ்ணன் உள்பட பலர் பேசினர். மேலும் முகாமில்,கூட்டுறவு வீட்டு வசதிசங்க தலைவர் நடராஜன், மாவட்ட சிறுபான்மை பிரிவு நிர்வாகி சாச்சு மற்றும் மாவட்ட, மாநகர, ஒன்றிய, பேரூர், பகுதி நிர்வாகிகள், ஒன்றிய, மாநகராட்சி கவுன்சிலர்கள், கட்சியினர் கலந்து கொண்டனர்.