உள்ளூர் செய்திகள்

சிறப்பாக செயல்படும் அங்கக விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம்- நம்மாழ்வார் விருது: வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு

Published On 2023-03-21 05:40 GMT   |   Update On 2023-03-21 05:40 GMT
  • வேளாண் சார்ந்த தொழில் தொடங்கும் இளைஞர்களுக்கு உதவ ரூ.4 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.
  • அங்கக வேளாண்மையை ஊக்குவிக்க 32 மாவட்டங்களில் 14,500 ஹெக்டேரில் 725 தொகுப்புகள் உருவாக்கப்படும்.

சென்னை:

தமிழக சட்டசபையில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அவர் கூறியதாவது:

கம்பு, கேழ்வரகு, தினை, சாமை உள்ளிட்ட பயிர்களை அதிகளவில் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு தலா ரூ.5 லட்சம் பரிசு வழங்கப்படும்.

சிறுதானிய பதப்படுத்தும் மையங்கள் அமைக்க உழவர் உற்பத்தியாளர் குழுக்களுக்கு மானிய விலையில் நிதி வழங்கப்படும்.

வேளாண் சார்ந்த தொழில் தொடங்கும் இளைஞர்களுக்கு உதவ ரூ.4 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

மக்களிடையே சிறுதானிய உணவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி சிறுதானிய திருவிழாக்கள் நடத்தப்படும்.

நிலமற்ற வேளாண் தொழிலாளர்களுக்கு கருவிகள் விநியோகிக்க ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு.

அங்கக வேளாண்மையை ஊக்குவிக்க 32 மாவட்டங்களில் 14,500 ஹெக்டேரில் 725 தொகுப்புகள் உருவாக்கப்படும்.

சிறப்பாக செயல்படும் அங்கக விவசாயிகளுக்கு ரூ.5 லட்சம் மற்றும் நம்மாழ்வார் விருது வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News