உள்ளூர் செய்திகள்

 போர் விமானங்கள் 

தாம்பரம் விமானப்படை தளத்தில் போர் விமானங்கள் சாகசம்

Published On 2022-10-08 19:17 GMT   |   Update On 2022-10-08 19:17 GMT
  • விமானங்கள், நெருக்கமாக சீறிப் பாய்ந்து பறந்து பார்வையாளர்களை கவர்ந்தன.
  • விமான கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

தாம்பரம்:

இந்திய விமானப்படை தனது 90வது ஆண்டு விழாவை நேற்று கொண்டாடியது. இதையொட்டி தாம்பரம் விமானப்படை தளத்தில் போர் விமானங்கள் பங்கேற்ற வான்வழிக் காட்சி நடத்தப்பட்டது. தாம்பரம் விமானப்படை தள அதிகாரி ஏர் கமாடோர் விபுல் சிங் சிறப்பு தலைமை விருந்தினராக கலந்து கொண்டார்.

சுகோய் 30 ரக போர் விமானம், சூ-30 ரக விமானம், போர் ஜெட் விமானம் உள்பட பல்வேறு வகையான விமானங்கள் மிகக் குறைந்த உயரத்தில் சீறி பாய்ந்து சென்று சாகசம் செய்தது பார்வையாளர்களை கவர்ந்தது. 


முன்னதாக விமானப்படையின் மெக்கானிக்கல் பிரிவு பயிற்சியாளர்கள், வான்வீரர் பயிற்சிக் குழுவினர் பங்கேற்று தற்காப்பு கலை, உடல் பயிற்சி மற்றும் சைக்கிள் மீது சாகசம் போன்றவை செய்து காட்டினர். பத்து வகையான விமானங்கள் இடம் பெற்ற கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

Tags:    

Similar News