உள்ளூர் செய்திகள்

தண்ணீர் தேடி வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானை

Published On 2023-02-11 10:03 GMT   |   Update On 2023-02-11 10:03 GMT
  • வெளியேறும் உபரி நீர் தொட்டியில் நீர் அருந்திவிட்டு யானை மீண்டும் வனப்பகுதிக்குள் செல்கிறது.
  • ஒகேனக்கல் வரும் சுற்றுலா பயணிகள் சாலையை கடந்து செல்லும் யானையை ஆர்வத்துடனும் பயத்துடனும் அங்கேயே காத்திருந்து பார்த்து செல்கின்றனர்.

பென்னாகரம்,

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்துள்ள ஒகேனக்கல் தமிழகத்தின் பிரசித்தி பெற்ற சுற்றுலா தலமாகவும், சுற்றிலும் இயற்கை எழில் சூழ்ந்த மலைகள் மற்றும் அடர்ந்த காடுகளைக் கொண்ட ஒரு வனப்பகுதியாக உள்ளது. இங்குயானைகள், காட்டெருமைகள், மான்கள், முயல், காட்டுப்பன்றி உள்ளிட்ட ஏராளமான உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன.

கோடை காலத்தில் தான் யானைகள் வனப்பகுதியில் இருந்து தண்ணீர் தேடி வனப்பகுதியை விட்டு வெளியில் வருவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே வனப் பகுதிக்குள் இருந்து வெளியேறும் யானைகள் நடமாட்டம் பென்னாகரம், பாலக்கோடு, தருமபுரி சுற்று வட்டாரங்களில் அதிக அளவில் காணப்படுகிறது.

இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மற்றும் கர்நாடகா வனப்பகுதியில் இருந்து 40-க்கும் மேற்பட்ட யானைகள் ஒகேனக்கல் வனப்பகுதிக்கு வர தொடங்கியுள்ளது.

இவ்வாறு வரும் இந்த யானைகள் தண்ணீர் தேடி வனப்பகுதியில் இருந்து வெளியேறி பென்னாகரம் - ஒகேனக்கல் சாலையை கடந்து ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்ட சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து வெளியேறும் உபரி நீர் தொட்டியில் நீர் அருந்திவிட்டு மீண்டும் வனப்பகுதிக்குள் செல்கிறது.

இவ்வாறு யானைகள் வரும் நேரங்களில் அவ்வழியாக பயணிக்கும் பொதுமக்கள் மற்றும் ஒகேனக்கல் வரும் சுற்றுலா பயணிகள் வனப்பகுதியை ஒட்டியுள்ள சாலையை கடந்து செல்லும் யானையை ஆர்வத்துடனும் பயத்துடனும் அங்கேயே காத்திருந்து பார்த்து செல்கின்றனர்.

Tags:    

Similar News