உள்ளூர் செய்திகள்

விழுப்புரம் அரசு கலைக் கல்லூரியில் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழியினை மாவட்ட கலெக்டர் பழனி, எம்.எல்.ஏ.,க்கள் புகழேந்தி, லட்சுமணன் மற்றும் அதிகாரிகள் ஏற்றுக் கொண்ட போது எடுத்தபடம்.

விழுப்புரம் அரசு கல்லூரியில் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி: கலெக்டர், எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்பு

Published On 2023-08-11 09:11 GMT   |   Update On 2023-08-11 09:11 GMT
  • போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள்.
  • கலெக்டர் பழனி தலைமையில் கல்லூரி மாணவர்கள் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

விழுப்புரம்:

சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள். அதையொட்டி விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் கலெக்டர் பழனி தலைமையில் கல்லூரி மாணவர்கள் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

அப்போது போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய், எம்.எல்.ஏ.க்கள் புகழந்தி, டாக்டர் லட்சுமணன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயச்சந்திரன், கோட்டாட்சியர் பிரவீனா குமாரி, தாசில்தார் வேல்முருகன், நகர மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி பிரபு, கல்லூரி முதல்வர் சிவகுமார் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News