அரியலூர் மாவட்டத்தில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் ஏலம்
- அரியலூர் மாவட்டத்தில் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் ஏலம் விடப்பட உள்ளது
- வரும் 10-ந் தேதி நடக்கிறது
அரியலூர்:
அரியலூர் மாவட்ட காவல் துறையில்மதுகுற்ற வழக்கு–களில் கைப்பற்ற–ப்பட்டு அரசுடைமை–யாக்கப்பட்ட வாகனங்களை வருகிற 10-ந்தேதி காலை 10 மணி முதல் ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பளர் பெரோஸ்கோன் அப்துல்லா முன்னிலையில் 48 இரண்டு சக்கர வாகனங்கள்மற்றும் 01 நான்கு சக்கர வாகனம் ஆக மொத்தம் 49 வாகனங்கள் பொது ஏலம் விடப்பட உள்ளது.
அரியலூர், பெரம்பலூர், திருச்சி மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த–வர்களும் பிற மாவட்டத்தை சேர்ந்தவர்களும் ஏலத்தில் கலந்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளர், மதுவிலக்கு அமல்பிரிவு, அரியலூர் மாவட்டம் அலுவலகத்தினை நேரிலோ அல்லது தொலைபேசியிலோ தொடர்பு கொள்ளலாம். தொடர்பு எண். 9498165793.
ஏலத்தில் கலந்து கொள்ப–வர்கள் காலை 10 மணிக்குள் 1000 ரூபாய் செலுத்தி முன்பதிவு செய்ய வேண்டும்.
வாகனத்தை அதிகபட்ச விலைக்கு ஏலத்தில் எடுத்த–வர் ஏலத்தொகை–யுடன் ஜிஎஸ்டி வுடன் சேர்த்து பிற்பகல் 3.00 மணிக்குள் உரிய அலுவலரிடம் செலு–த்தி வாகனத்தை பெற்றுக் கொள்ள வேண்டும்.
வாகனங்களை 09ந் தேதி காலை 10.00 மணிமுதல் பார்வையிடலாம். ஏலத்தில் கலந்து கொள்ள வருபவர்கள் தங்களது ஆதார் அடையாள அட்டையின் நகலை தவறாமல் கொண்டு வரவேண்டும் என மாவட்ட போலீஸ் எஸ்.பி.பெரோஸ்கான் அப்துல்லா தெரிவித்து–ள்ளார்.