உள்ளூர் செய்திகள்

அரசு பள்ளியில் பாரதியார் நினைவு தினம்

Published On 2022-09-12 13:07 IST   |   Update On 2022-09-12 13:07:00 IST
  • அரசு பள்ளியில் பாரதியார் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது
  • மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் சிறுவலூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் மகாகவி பாரதியார் நினைவு தினம் பள்ளி தலைமை ஆசிரியர் சின்னதுரை தலைமையில் அனுசரிக்கப்பட்டது. மகாகவி பாரதியாரின் படத்திற்கு ஆசிரியர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். அப்போது பள்ளி தலைமையாசிரியர் பேசுகையில், பாரதியார் பாடல்கள், கவிதைகள் மக்களிடையே விடுதலை உணர்வையும், சுதந்திர வேட்கையையும் தூண்டியது. பாரதியார் மறைந்தாலும் அவரின் கவிதைகள், பாடல்கள், கட்டுரைகள் உலகம் உள்ளவரை உயிரோட்டமாக இருக்கும் என்றார்."

Tags:    

Similar News