- ஜெயங்கொண்டத்தில் கல்லூரி மாணவ மாணவிகளுக்கு தீ தடுப்பு ஒத்திகை பயிற்சி நடைபெற்றது.
- தீயணைப்பு துறை மற்றும் மீட்பு பணித்துறை சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டது
ஜெயங்கொண்டம்
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணி துறை சார்பில் ஜெயங்கொண்டம் அருகே தத்தனூர் மீனாட்சி ராமசாமி கல்லூரியில் மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தீ தடுப்பு போலி ஒத்திகை நிகழ்ச்சி நடத்திக் காண்பிக்கப்பட்டது. மற்றும் துண்டு பிரசுரங்கள் வழங்கியும், தீத்தடுப்பு போலி ஒத்திகை பயிற்சி மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தப்பட்டது. தற்செயலாக வீடுகளில் தீவிபத்து ஏற்படும் அப்போது எண்ணெயினால் ஏற்படும் தீயை எவ்வாறு அனைப்பது. சமையல் எரிவாயுவினால் ஏற்படும் எரிவாயு கசிவு அதனால் ஏற்படும் தீ இவைகளை எவ்வாறு கையாள்வது தீயை கட்டுப்படுத்தி அணைப்பது, தீ ஏற்பட்ட வீடுகளில் இருந்து மக்களை எவ்வாறு வீட்டிலிருந்து வெளியே கொண்டு வருவது போன்றவைகளைப் பற்றி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு செயல்முறைகள் போலி ஒத்திகை பயிற்சி நடத்தி காண்பித்தனர். இந்த போலி ஒத்திகை நிகழ்ச்சிக்கு தீயணைப்பு நிலைய அலுவலர் ராஜா தலைமையில் வீரர்கள் செய்து காண்பித்தனர்.