உள்ளூர் செய்திகள்

அரியலூரில் பள்ளி வாகனங்கள் ஆய்வு

Published On 2023-05-21 04:59 GMT   |   Update On 2023-05-21 04:59 GMT
  • அரியலூரில் பள்ளி வாகனங்கள் ஆய்வு மேற்கொள்ளபட்டது
  • அரியலூரில் உள்ள 30 தனியார் பள்ளிகளில் இயங்கி வரும் 120 வாகனங்கள் ஆய்விற்காக கொண்டு வரப்பட்டிருந்தது.

அரியலூர்,

அரியலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் பள்ளி வாகனங்கள் அனைத்திலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் இந்த ஆய்வு நடைபெற்றது. அரியலூரில் உள்ள 30 தனியார் பள்ளிகளில் இயங்கி வரும் 120 வாகனங்கள் ஆய்விற்காக கொண்டு வரப்பட்டிருந்தது.வட்டார போக்குவரத்து அலுவலர் பிரபாகரன், உடையார்பாளையம் கோட்டாட்சியர் பரிமளம், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலட்சுமி, துணை போலீஸ் சூப்பிரண்டு சலீம் ஜாவித், வாகன ஆய்வாளர் சரவணபவன், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் இந்த வாகனங்களை ஆய்வு செய்தனர்.

அப்போது, பேருந்துகளில் சிசிடிவி கேமரா, வேககட்டுப்பாட்டு கருவி, அவசர பாதை, இன்சூரன்ஸ் உள்ளிட்டவைகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. தொடர்ந்து, பள்ளி வாகனங்கள் இயக்கும் முறைகள், தீயணைப்பு கருவி இயக்கும் முறை, விபத்து நேரிடும் போது முதலுதவி அளிக்கும் முறைகள் குறித்து ஓட்டுநர்களுக்கு எடுத்து கூறப்பட்டது.

Tags:    

Similar News