தமிழ்நாடு

மேட்டூர் அணையை தூர்வார முடியாது- அமைச்சர் துரைமுருகன்

Published On 2024-11-09 02:23 GMT   |   Update On 2024-11-09 02:23 GMT
  • நீர் நிலைகளை தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டம் எதுவும் இல்லை.
  • தாமிரபரணி ஆற்றை நாளை ஐகோர்ட்டு நீதிபதிகள் ஆய்வு செய்வது குறித்து எனக்கு எதுவும் தெரியாது.

வேலூர்:

வேலூரை அடுத்த அணைக்கட்டு ஊராட்சியில் புதிதாக தொடங்கப்பட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலக திறப்பு விழா நேற்று நடந்தது. நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அலுவலகத்தை திறந்து வைத்தார்.

பின்னர் அமைச்சர் துரைமுருகன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காவிரி ஆற்றின் குறுக்கே ஆதனூர்-குமாரமங்கலம் தடுப்பணை, புகளூர் கதவணை திட்டத்தை கிடப்பில் போட்டது குறித்து கொஞ்சம் கூட ஆதாரமில்லாமல் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார். இந்த திட்டம் அவரால் தொடங்கப்பட்டது. சரியாக ஆய்வு செய்யாமல் இடத்தை தேர்வு செய்துவிட்டார்.

இந்த திட்டத்தை செயல்படுத்த மறுஆய்வு செய்யவே பாதி பணம் போய்விட்டது. இதனை அவர் சட்டமன்றத்தில் பேசட்டும் சரியான பதில் அளிக்கிறேன்.

நீர் நிலைகளை தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டம் எதுவும் இல்லை. மேட்டூர் அணையை தூர்வார முடியாது. யாரும் அங்கு மணல் எடுக்கமாட்டார்கள். தாமிரபரணி ஆற்றை நாளை ஐகோர்ட்டு நீதிபதிகள் ஆய்வு செய்வது குறித்து எனக்கு எதுவும் தெரியாது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News