ஊரக வாழ்வாதார இயக்க திட்டத்தில் முறைகேடு
- மணப்பத்தூர் ஊராட்சியில் ஊரக வாழ்வாதார இயக்க திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு
- அரியலூர் கலெக்டரிடம் புகார் மனு
அரியலூர்,
தமிழப் பேரரசு கட்சியின் திருச்சி மண்டலச் செயலாளரும், ஓய்வுப் பெற்ற காவல் துறை அதிகரியுமான கு.முடிமன்னன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணாவிடம் ஒரு மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள நலிவுற்ற ஏழை, எளிய குடும்பங்கள் மேம்படுத்தும் நோக்கில், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் மகளிர் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டம் அனைத்து ஊராட்சிகளிலும் செயல்பட்டு வருகிறது.
ஆனால் மணப்பத்தூர் ஊராட்சியில் இந்த திட்டத்தில் முறைகேடுகள் நடந்துள்ளன. இந்த திட்ட நிதிகள் நலிவுற்றவர்களுக்கு பயன்படுத்தப்படாமல், வேறு வழியில் முறைகேடாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.எனவே ஊராட்சியை ஆய்வு செய்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.