வழக்கறிஞர்கள் நீதிமன்ற மன்ற பணிகள் புறக்கணிப்பு
- அரியலூரில் வழக்கறிஞர்கள் நீதிமன்ற மன்ற பணிகள் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்
- சட்ட பிரிவுகளின் பெயர்கள் மாற்றப்படுவதற்கு எதிர்ப்பு
அரியலூர்,
மத்திய அரசைக் கண்டித்து, அரியலூரில் வழக்குரைஞர் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்திய தண்டனை சட்டம், இந்திய சாட்சிகள் சட்டம், குற்றறவியல் நடைமுறை சட்டம் உள்ளிட்ட சட்டங்களின் பெயர்களை மாற்றறம் மற்றும் திருத்தம் கொண்டு வர சட்ட மசோதாவை தாக்கல் செய்தது, தொடர்ந்து ஹிந்தி மற்றும் சம்ஸ்கிருதம் திணிப்பில் ஈடுபட்டு வரும் மத்திய அரசைக் கண்டித்தும், மேற்கண்ட சட்ட மசோதாவை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தினர்.போராட்டத்துக்கு அரியலூர் வழக்குரைஞர்கள் அச்சங்கத்தின் தலைவர் மனோகரன் தலைமை வகித்தார். இணைத் தலைவர் கதிரவன், செயலர் முத்துக்குமரன், அரசு வழக்குரைஞர்கள் கதிரவன், ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.செந்துறை குற்றவியல் நீதிமன்றம் முன்பு வழக்குரைஞர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு அச்சங்கத்தின் தலைவர் சின்னதுரை தலைமை வகித்தார். வழக்குரைஞர் சங்க பொறுப்பாளர்கள் காரல்மார்க்ஸ்,ஜெயபால், செல்வநம்பி, சிராஜுதீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மத்திய அரசைக் கண்டித்து முழக்கமிட்டனர்.