பேரிடர் தொடர்பாக பொதுமக்கள் புகார் தெரிவிக்க தொலைபேசி எண்கள்
- அரியலூர் மாவட்டத்தில் பேரிடர் தொடர்பாக பொதுமக்கள் புகார் தெரிவிக்க தொலை பேசி எண்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளது
- பேரிடர் கட்டுப்பாட்டு அறையினை கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா ஆய்வு செய்தார்
அரியலூர்,
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறையினை கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, கட்டுப்பாட்டு அறையின் கட்டணமில்லா தொலைபேசி எண்.1077 மற்றும் வாட்ஸ்-அப் எண் 9384056231 ஆகியவற்றின் மூலம் பொதுமக்கள் தொடர்பு கொண்டு தெரிவித்த புகார்கள், தொலைக்காட்சி செய்திகளில் வரப்பெற்ற புகார்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த பதிவேடுகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
மேலும் வடகிழக்கு பருவமழை தொடர்பான அனைத்து புகார்கள் குறித்தும் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட துறை அலுவல்களுக்கு உடனுக்குடன் தெரிவித்திட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
மேலும் பேரிடர் தொடர் பான புகார்களை பொதுமக்கள் தெரிவிக்கும் வகையில் தொலை பேசி எண்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அதன்படி மாவட்ட கட்டுப்பாட்டு அறையை 1077 மற்றும் 04329-228709 என்ற தொலை பேசி எண்களிலும், அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் 04329- 222058 , உடையார்பாளையம் கோட்டாட்சியர் அலுவலகம் 04331-245352, அரியலூர் வட்டாட்சியர் அலுவலகம் 04329-222062, ஜெய ங்கொண்டம் வட்டாட்சியர் அலுவலகம் -04331-250220, செந்துறை வட்டாட்சியர் அலுவலகம் 04329-242320 மற்றும் ஆண்டிமடம் வட்டாட்சியர் அலுவலகம் 04331-299800 என்ற தொலை பேசி எண்களிலும் 9384056231 என்ற வாட்ஸ்- அப் எண்ணிலும் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.
இந்த புகார்கள் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) பூங்கோதை, வட்டாட்சியர் (பேரிடர் மேலாண்மை) சந்திரசேகரன் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.