பாதுகாப்பான நடை பயிற்சி சாலை அமைக்க கோரிக்கை
- அரியலூரில்பாதுகாப்பான நடை பயிற்சி சாலை அமைக்க கோரிக்கை எழுந்துள்ளது
- ஏற்கனவே திட்டமிட்டுள்ள சாலை பாதுகாப்பற்றது என்று குற்றச்சாட்டு
அரியலூர்,
அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுதுறை சார்பில் நடப்போம் நலம்பெறுவோம் என்ற நடைபயிற்சி திட்டத்தினை போக்குவரத்துத்துறை அமைச்சர்சிவசங்கர் தொடங்கி வைத்தார்.
மாவட்ட கலெக்டர் ஆனிமேரி ஸ்வர்ணா, எம்எல்ஏக்கள் சின்னப்பா, கண்ணன் உட்பட அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
கல்லூரி சாலை, பள்ளேரி கரை, அரசு மருத்துவமனைசாலை, பென்னிகவுஸ் சாலை, முருகன் கோவில், சத்திரம், எம்ஜிஆர் சிலை, தேரடி, அண்ணாசிலை, செட்டிஏரிகரை, ஜெயங்கொண்டம் சாலை, பழைய கலெக்டர் அலுவலகம் சென்று – மீண்டும் வந்த வழியாக செல்லவேண்டும் என நடைபயிற்சி பாதை அமைக்கப்பட்டது.
இந்த பாதை கரடு முரடான பாதை, சாலை விபத்துகளை ஏற்படுத்தும் பாதை, இந்த வழித்தடத்தில் பேருந்து, லாரி, கனரக வாகனங்கள், வேன், ஆட்டோ, கார், இருசக்கர வாகனங்கள் செல்லக்கூடிய முக்கிய சாலையாகும். இந்த பாதையில் நடைபயிற்சி மேற்கொள்வது ஆபத்தை உருவாக்கும். நடைபயிற்சி மேற்கொள்ள செட்டி ஏரிக்கரை, மாவட்ட விளையாட்டு அரங்கம், இருசுக்குட்டை, போன்ற இடங்களில் நான்கு பகுதி கரைகளையும் சீரமைத்து, மின்விளக்கு அமைத்து கொடுத்தால் ஆபத்து இல்லாமல் அமைதியாக பயமில்லாமல் நடைபயிற்சி மேற்கொள்ள வசதியாக இருக்கும். எனவே மாவட்ட கலெக்டர் மறுபரிசிலனை செய்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.