உள்ளூர் செய்திகள்

உலக ஓசோன் தினம் அனுசரிப்பு

Published On 2023-09-16 08:31 GMT   |   Update On 2023-09-16 08:31 GMT
  • அரியலூர் சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக ஓசோன் தினம் அனுசரிக்கப்பட்டது.
  • பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது

அரியலூர்,

அரியலூர் அடுத்த சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக ஓசோன் தினம் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.இந்நிகழ்சிக்கு அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சின்னதுரை தலைமை வகித்தார். அரியலூர் கோட்டாட்சியர் ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசுகையில், நாகரீகம் வளர்ச்சி அடைந்தாலும் பூமிப் பந்தில் வாழும் அனைத்து உயிரினங்களையும் பாதுகாக்கும் ஓசோன் படலத்தை பாதுகாப்பது ஒவ்வொரு மனிதனின் தலையாயக் கடமையாகும்நாகரிக வளர்ச்சியில் மனிதன் பயன்படுத்தும் பல பொருள்கள் ஓசோன் படலத்தை சிதைக்கின்றன. ஓசோன் சிதைவை பாதுகாக்கும் ஒரே வழி மரக்கன்றுகளை நட்டு வளர்க்க வேண்டும்.பூமியில் உயிரினங்களின் ஆதாரம் மரங்களே ஒவ்வொரு மாணவரும் குறைந்தது பத்து மரக்கன்றுகளை நட்டு பராமரிக்க வேண்டும் என்றார். பின்னர் பல்வேறு போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவ,மாணவிகளுக்குப் பரிசுகளை வழங்கி, வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.முன்னதாக பசுமை படை ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமரன் வரவேற்றார் . முடிவில் செந்தமிழ்ச் செல்வி நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியர்கள் தனலட்சுமி, செவ்வேள், தங்கபாண்டி, இளநிலை உதவியாளர் மணிகண்டன் ஆகியோர் மேற்கொண்டனர்.

Tags:    

Similar News