கள்ளக்குறிச்சியில் கோவில் கும்பாபிஷேக விழாவில் 24 பவுன் நகை கொள்ளை
- கள்ளக்குறிச்சியில் கோவில் கும்பாபிஷேக விழாவில் 24 பவுன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்று விட்டனர்
- கள்ளக்குறிச்சி சிதம்பரம் பிள்ளை தெரு அருகே பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி சிதம்பரம் பிள்ளை தெரு அருகே பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று காலை கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் அப்பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இந்நிலையில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்ம நபர்கள் சிதம்பரம்பிள்ளை தெருவைச் சேர்ந்த கந்தசாமி மகள் விஷ்ணு பிரியா (வயது 24) என்பவர் கழுத்தில் அணிந்திருந்த 7 பவுன் நகை, இதேபோல் வாய்க்கால் மேட்டு தெருவைச் சேர்ந்ந ஆசைத்தம்பி மனைவி சொர்ண புஷ்பம் என்பவர் அணிந்திருந்த 13 பவுன் நகை, வேறு ஒரு பெண்ணிடம் 4 பவுன் நகை ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.கும்பாபிஷேக விழாவில் 3 பெண்களிடம் 24 பவுன் நகை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. அவற்றின் மதிப்பு சுமார் 8 லட்சம் என கூறப்படுகிறது.
இது குறித்து மூன்று பெண்களும் தனித்தனியாக கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர் அதன்படி போலீசார் இந்த நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
பத்திரகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா குறித்து பொதுமக்கள் முறையாக காவல் துறைக்கு தகவல் தெரிவித்தும் போலீசார் பாதுகாப்பு பணிக்கு வரவில்லை என கூறப்படுகிறது.
இந்த சூழ்நிலையை பயன்படுத்தி மர்ம நபர்கள் பெண்களிடம் நகையை திருடிச் சென்றதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். கோவில் கும்பாபிஷேக விழாவில் 3 பெண்களிடம் மர்ம நபர்கள் நகை திருடிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.