உள்ளூர் செய்திகள்

செங்கோட்டையில் அ.தி.மு.க. மாநாடு குறித்த ஆட்டோ பிரசாரம்-கிருஷ்ணமுரளி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

Published On 2023-08-14 14:32 IST   |   Update On 2023-08-14 14:32:00 IST
  • அ.தி.மு.க. பொன்விழா எழுச்சி மாநாட்டுக்கான பிரசார பணிகள் செங்கோட்டை பகுதியில் தொடங்கப்பட்டது.
  • கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ., ஆட்டோக்களில் மாநாடு குறித்த ஸ்டிக்கர்கள், பதாகைகளை ஒட்டி பிரசார பணிகளை தொடங்கி வைத்தார்.

செங்கோட்டை:

மதுரையில் வருகிற 20-ந்தேதி அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற உள்ள அக்கட்சியின் பொன்விழா எழுச்சி மாநாட்டுக்கான பிரசார பணிகள் செங்கோட்டை பகுதியில் தொடங்கப்பட்டது.

இதில் கலந்து கொண்ட தென்காசி வடக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா எம்.எல்.ஏ., ஆட்டோக்களில் மாநாடு குறித்த ஸ்டிக்கர்கள், பதாகைகளை ஒட்டி பிரசார பணிகளை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் செங்கோட்டை நகர செயலாளர் கணேசன் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை அ.தி.மு.க. உறுப்பினர் மதன் செய்திருந்தார்.

Tags:    

Similar News