அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க விழிப்புணர்வு பேரணி
- விழிப்புணர்வுப் பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
- சுமார் 200க்கும் மேற்பட்ட அரசுப்பள்ளிஆசிரியர்கள் இந்த பேரணியில் கலந்து கொண்டனர்.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நம் பள்ளி நம் பெருமை மற்றும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் பொருட்டு நடைபெற்ற அரசு பள்ளி ஆசிரியர்களின் விழிப்புணர்வுப் பேரணியை மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த விழிப்புணர்வு பேரணியில் அரசு பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவிகளுக்கு அரசு பணிகளில் 20 சதவீதம் முன்னுரிமை மற்றும் 6-ம்வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் உயர்கல்வி பயில 7.5 சதவீதம் முன்னுரிமை உள்ளிட்ட அரசு பள்ளியின் சிறப்பு அம்சங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பியவாறும் அரசு பள்ளி ஆரிசியர்கள் பேரணியாக சென்றனர்.
மேலும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறித்த துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கி பிள்ளைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க வேண்டுமென அறிவுறுத்தினார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் துவங்கிய இந்த பேரணியானது, தென்னம்பாளையம் மார்க்கெட்டில் முடிவடைந்தது. சுமார் 200க்கும் மேற்பட்ட அரசுப்பள்ளிஆசிரியர்கள் இந்த பேரணியில் கலந்து கொண்டனர்.