தமிழ்நாடு
காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது
- வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது.
- தமிழக கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று மாலையில் இருந்து மழை தொடங்கும்.
சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:
வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.
தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் இன்று மாலைக்கு பின் மழை படிப்படியாக அதிகரிக்கும். டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
இதன் காரணமாக தமிழக கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று மாலையில் இருந்து மழை தொடங்கும். இன்று முதல் 27-ந்தேதி வரை ஒருசில இடங்களில் கன முதல் மிக கன மழை பெய்வதற்கும் வாய்ப்பு உள்ளது.
28 மற்றும் 29-ந்தேதிகளில் ஒருசில மாவட்டங்களில் கனமழை பெய்யும். 27, 28, 29 ஆகிய தேதிகளில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளது.