உள்ளூர் செய்திகள்

வனத்தில் பிளாஸ்டிக் எடுத்துச்செல்ல தடை

Published On 2023-05-14 08:38 GMT   |   Update On 2023-05-14 08:38 GMT
  • சேலம், கன்னங்குறிச்சி தாமரை நகரில் சேர்வரான் தெற்கு வனச்சரகம் சார்பில் சுற்றுச் சூழல் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
  • வனங்களும், வன உயிரினங்களும் சிறப்பாக பாதுகாக்க வேண்டும். வனத்துக்குள் பிளாஸ்டிக் பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது.

சேலம்:

சேலம், கன்னங்குறிச்சி தாமரை நகரில் சேர்வரான் தெற்கு வனச்சரகம் சார்பில் சுற்றுச் சூழல் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. வனச்சரக அலுவலர் முரளிதரன் பேசியதாவது:-

வனங்களும், வன உயிரினங்களும் சிறப்பாக பாதுகாக்க வேண்டும். வனத்துக்குள் பிளாஸ்டிக் பொருட்களை எடுத்துச் செல்லக்கூடாது. வன உயி ரினங்கள் வாழும் இடங்க ளில் மனித நடமாட்டம் இருக்கக்கூடாது.

அதே போல் வனத்துக்குள் அன்னியர்கள் நுழையக்கூடாது. வனத்தை பாதுகாத்தால் தான் பருவ மழை சரியாக பெய்யும். இவ்வாறு அவர் கூறினார். கிராம வன குழுவினர், வன பணியாளர்கள் பங்கேற்றனர்.

Tags:    

Similar News