மெரினா கடற்கரையில் குதிரை எட்டி உதைத்ததில் சிறுவனின் மூக்கு உடைந்தது
- குதிரை சவாரி செய்வதற்காக குதிரை ஓட்டி ஒருவரை அழைத்து பேசிக்கொண்டிருந்தனர்.
- திருவல்லிக்கேணியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
சென்னை:
மெரினா கடற்கரையில் மணல்பரப்பில் குதிரை சவாரி செய்வதற்கு பலரும் விரும்புகிறார்கள்.
அந்த வகையில் பெங்களூரில் இருந்து வந்திருந்த ஒரு குடும்பத்தினர் சென்னைக்கு சுற்றுலா வந்த இடத்தில் மெரினா கடற்கரைக்கு சென்றிருந்தனர். அப்போது அவர்கள் குதிரை சவாரி செய்வதற்காக குதிரை ஓட்டி ஒருவரை அழைத்து பேசிக்கொண்டிருந்தனர். இந்த நேரத்தில் குதிரை எதிர்பாராதவிதமாக எட்டி உதைத்தது. இதில் எபிநேசர் என்ற சிறுவனின் முகத்தில் உதை விழுந்தது. அவனது மூக்கு மற்றும் கன்னத்தில் பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து திருவல்லிக்கேணியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுதொடர்பான புகாரின் பேரில் அண்ணாசதுக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
குதிரை ஓட்டியான அசோக்கை அழைத்து விசாரணை நடத்திய போலீசார் அவரிடம் எழுதி வாங்கிவிட்டு அனுப்பி வைத்தனர்.