உள்ளூர் செய்திகள்

சவுக்கு சங்கர் ஜெயிலில் இருந்து வெளியே வருவதில் சிக்கல்: அடுத்தடுத்து பாயும் வழக்குகள்

Published On 2024-05-09 05:11 GMT   |   Update On 2024-05-09 06:44 GMT
  • சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசிலும் 2 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
  • சவுக்கு சங்கர் வெளியே வருவதில் சிக்கல்

கோவை:

சென்னையை சேர்ந்தவர் சங்கர். இவர் சவுக்கு மீடியா என்ற பெயரில் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார்.

அதில் பல்வேறு அரசியல் கருத்துக்களை தெரிவித்து வருகிறார். இதுதவிர பல்வேறு யூடியூப் சேனல்களில் அரசியல் தொடர்பான கருத்துக்களை தெரிவித்து வந்தார்.

அண்மையில் தனியார் யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த சவுக்கு சங்கர், போலீஸ் உயர் அதிகாரிகள் மற்றும் பெண் போலீஸ் குறித்து அவதூறான கருத்துக்களை தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக அவர் மீது கோவையை சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் சுகன்யா என்பவர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் கடந்த 4-ந்தேதி தேனி அருகே பழனிசெட்டிபட்டியில் வைத்து சவுக்குசங்கரை கைது செய்தனர்.

பின்னர் அவரை அன்றைய தினமே கோவை அழைத்து வந்து கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது நீதிபதி அவரை 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் சவுக்குசங்கரை கோவை மத்திய ஜெயிலில் அடைத்தனர்.

இதற்கிடையே தேனியில் வைத்து சவுக்கு சங்கரை கைது செய்த போது, அவ ரது காரில் இருந்து கஞ்சா வையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாகவும் சவுக்குசங்கர் மீது பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் கோவை க்கு வந்து, கோவை மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த அவரை கஞ்சா வழக்கிலும் கைது செய்து நடவடிக்கை எடுத்தனர்.

அதனை தொடர்ந்து நேற்று, அவரை கஞ்சா வழக்கில் கோர்ட்டில் ஆஜர்படுத்துவதற்காக கோவையில் இருந்து மதுரைக்கு பழனிசெட்டி பட்டி போலீசார் அழைத்து சென்றனர். மதுரையில் உள்ள போதைப்பொருள் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் அவரை ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி செங்கமலச் செல்வன், சவுக்கு சங்கரை வருகிற 22-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார்.

இதையடுத்து அவர் கோவை மத்திய ஜெயிலுக்கு கொண்டு வந்து அடைக்க ப்பட்டார்.

இந்த நிலையில் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள சவுக்கு சங்கர் மீது தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் வழக்குகள் பாய்ந்த வண்ணம் உள்ளன. ஏற்கனவே சேலம், திருச்சி யில் பெண் போலீசார் கொடுத்த புகாரின் பேரில் பெண்கள் வன்கொடுமை, அவதூறாக பேசுதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.

இதேபோல் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசிலும் 2 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இந்த வழக்குகளிலும் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை சென்னை போலீசார் இன்று கோவை ஜெயிலுக்கு வந்து சவுக்கு சங்கரிடம் வழங்கினர்.

இதேபோல் நாகையிலும் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.ஏற்கனவே பெண் போலீசார் குறித்து அவ தூறு கூறியதாக 6 வழக்கு கள் மற்றும் தேனியில் கஞ்சா வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. திருச்சி மாவட்டம் முசி றியை சேர்ந்த டி.எஸ்.பி யாஸ்மின் என்பவர் திருச்சி சைபர் கிரைம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் சவுக்கு சங்கர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கைதான சவுக்கு சங்கர் தனக்கு ஜாமீன் வழங்க கோரி கோவை 4-வது ஜூடிசியல் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். கடந்த 7-ந் தேதி இந்த மனு விசாரணைக்கு வந்த போது, இந்த வழக்கினை 10-ந் தேதி நாளை விசாரி ப்பதாக தெரிவித்தார். இந்த வழக்கு நாளை கோவை 4-வது ஜூடிசியல் கோர்ட்டில் வர உள்ளது.

அப்போது அவருக்கு ஜாமீன் கிடைக்குமா? இல்லையா? என்பது தெரியவரும். அப்படியே ஒரு வேளை கோவை போலீசார் கைது செய்த வழக்கில் இருந்து அவருக்கு ஜாமீன் கிடைத்தாலும், தற்போது புதிதாக போடப்ப ட்டுள்ள வழக்குகளில் ஏதாவது ஒன்றில் அவரை மீண்டும் கைது செய்வ தற்கும் வாய்ப்புகள் அதிக மாக உள்ளது.

இப்படி ஒவ்வொரு நாளும் புதிது, புதிதாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பதியப்பட்டு வரும் வழக்குகளால் சவுக்கு சங்கர் வெளியே வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே, சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய தடை விதிக்க கோரி சவுக்கு மீடியா நிறுவனத்தில் பணியாற்றும் விக்னேஷ் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி கே.குமரேஷ்பாபு, சவுக்கு சங்கரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கக் கூடாது என தடைவிதிக்கக் கோரி 3-வது நபர் எப்படி மனுதாக்கல் செய்ய முடியும்? யூகத்தின் அடிப்படையில் மட்டுமே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது எனக் கூறி தள்ளுபடி செய்தார்.

இதேபோல் சவுக்கு சங்கரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக் கோரி அவரது தாயார் கமலா மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி கள் ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, ஆர்.கலைமதி ஆகியோர், கோவை சிறையில் உள்ள சவுக்கு சங்கர் காயம் அடைந்துள்ளாரா என்பது குறித்து மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு விசாரணை நடத்தி அந்த அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர்.

அதன்படி சட்ட பணிகள் ஆணைக்குழு வக்கீல்கள், அரசு மருத்துவர்கள் அட ங்கிய குழுவினர் விசாரணை நடத்தி உள்ளனர். இந்த அறிக்கையை அவர்கள் தனித்தனியாக சீலிடப்பட்ட கவரில் வைத்து கோர்ட்டில் தாக்கல் செய்ய உள்ளனர்.

Tags:    

Similar News