"குற்றச் செயல்களில் ஈடுபடக்கூடாது"- 630 ரவுடிகளை அழைத்து சென்னை போலீஸ் எச்சரிக்கை
- ஜாமீனில் வெளிவர முடியாதபடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருந்த 6 தலைமறைவு குற்ற வாளிகளை கைது செய்தனர்.
- போலீஸ் நிலைய பகுதியிலும் உள்ள ரவுடிகளை தீவிரமாக கண்காணிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.
சென்னை:
சென்னையில் ரவுடிகள் கொட்டத்தை அடக்க சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றப்பிரிவு போலீசார் கடந்த 2 மாதமாக தீவிர தேடுதல் வேட்டை நடத்தி 616 ரவுடிகளை கைது செய்து ஜெயிலில் அடைத்து உள்ளார்கள். ஜாமீனில் வெளிவர முடியாதபடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருந்த 6 தலைமறைவு குற்ற வாளிகளை கைது செய்தனர்.
ஒவ்வொரு போலீஸ் நிலையத்திலும் ரவுடிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருக்கும். அதன் அடிப்படையில் அவர்களை போலீசார் கண்காணிக்க வேண்டும்.
இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ள 630 ரவுடிகளை போலீசார் கடந்த 6-ந்தேதி போலீஸ் நிலையங்களுக்கு வரவழைத்து இருந்தனர்.
அவர்களிடம் எந்தவிதமான குற்றச்செயல்களிலும் ஈடுபடக்கூடாது என்று போலீசார் அறிவுரை வழங்கியதோடு மீறி ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்து அனுப்பினார்கள்.
ஒவ்வொரு போலீஸ் நிலைய பகுதியிலும் உள்ள ரவுடிகளை தீவிரமாக கண்காணிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.